Thursday, August 31, 2023

மதிய உணவு வேளை

 நீங்கள் கொத்திவிட்டு போக 

என் மூளை ஒன்றும் 

கொய்யாப்பழம் இல்லை !

நீங்கள் பயன்படுத்திவிட்டு 

தூக்கியெறிய நான் ஒன்றும் எலும்புதுண்டுகள் இல்லை !

என் நேரத்தை வீணடிக்க நான் ஒன்றும் பழையசாதம் இல்லை !

நீங்கள் கேலி செய்ய நான் ஒன்றும் உப்புமா இல்லை !

மதிய  உணவு வேளை தாண்டி போய்க்கொண்டிருந்த - அலுவலக 

இணையவழி சந்திப்பின் (online meeting)

இடைவெளியில் எழுதியது 





Wednesday, August 30, 2023

நினைவு

 இன்று நான் பயன்படுத்திய 

சொல் ஒன்று உன்னை நினைவுபடுத்தியது 

நேற்று நான் எதையோதொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருக்கும்போது உன் நினைவு தட்டுப்பட்டது 

எடுத்து வைக்க மனமின்றி தடுமாறத்துடன்  விட்டு விட்டேன் 


சிறியதோ பெரியதோ ஒரு பயணம் முடிவதற்குள்ளேயே உன் நினைவு வந்துவிடுகிறது பேரூந்துலிருந்து இறங்க மறுக்கும் ஒரு குழந்தையை போல 


ஒரு அடர்வனத்தில் 

விடுவித்து விட்டு, வீட்டுக்கு திரும்ப வேண்டியதாயிருக்கிறது உன் நினைவுகளை தினமும்!



முகவரி

 உனக்காக  தினமும் நான்

காதல் கடிதஙகள் எழுதுவேன் 

அனுப்பிய யாவும் என்னிடமே 

திரும்பி வந்தன 

தவறான முகவரி என்று..

திரும்ப திரும்ப சரிபார்த்தேன்,

 சரியான முகவரிதான் ..

பின்தான் தெரிந்தது - நீதான் 

முகவரியை மாற்றிக்கொண்டாய் என்று ,

ஆனாலும் எழுதிக்கொண்டே இருக்கிறேன் உனக்கான காதல் கடிதங்களை !





நீண்ட உறக்கத்திற்காக

 நீண்டதொரு உறக்கத்தின் முடிவில் மீண்டும் ஒரு நாள் !

சில இரவுகள் பலருக்கு விடியாமலே போய்விடும் தருணங்களை நினைத்தபடி மீண்டும் போர்வைக்குள் 

ஒரு உற்சாக உறக்கத்திற்க்காக !

 எனக்காக சுருக்கிக்கொண்டது 

அந்த சூரியக்கதிர்களும் !

வரைமுறையற்ற தண்ணி லாரியின் அலறலில் வாரிசுரிட்டிக்கொண்டு எழுந்துவிட்டேன்!

 என்னை நானே தயார்செய்துகொள்வதைவிட 

வேறெந்த வேலையும் மனைவி வைப்பதில்லை !

வேலையை நேசிப்பவன்தான் நான்

 என் வேலையை நேசிக்கமறுப்பவர்களால் தான் அலுவலகம் ஒரு அலுப்பாகிறது!

 இருந்தும் அந்த அலுப்பான நாளை நானே அழகாக்கி கொள்வேன் !

மீண்டும் ஒரு நீண்ட உறக்கத்திற்காக 




வேடிக்கை விரும்பி

 அலைபேசியின் கேளிக்கை   காணொளிகளில் (reels) எக்கணமும் பறிகொடுத்த பார்வைகளின் மத்திதியில் இன்னுமும் வாகன ஜன்னலில் (office cab)

வேடிக்கை விரும்பி நான் ..


அவரின் பின் வாடும்

குடும்ப பின்னணி

கவலை தருவதாய் இருப்பினும் அவைரை போன்ற கொடுத்து வைத்தவன் எவனும் இல்லை என்று கொண்டாடதோனுகிறது

 நடைமேடைமீது மதுபோதையில்

 மயங்கி கிடைக்கும் அவனை!


இன்ஜினீயர்க்கு படித்து விட்டு

 இரண்டு சக்கர வாகனத்தில் டெலிவரி செய்யும் அந்த இளைஞர் !

வெகு நாட்களாக மூடப்பட்டிருக்கும் 

அந்த கட்டிடம் அதன் பின் இருக்கும் 

அதன் துயரம்!

என்னையையே பார்ப்பதாக 

நான் கடந்து செல்லும் அந்த இளம்பெண்ணின் சுவர் ஓவியம் !

அருந்த செருப்புடன் 

அந்த விற்பனை பிரதி !


தினம் தினம் வெவ்வேரு தரிசனம் 










 


Sunday, August 27, 2023

மஞ்சள் வானம்

 வானம் வெட்கத்தில் 

மேகத்தில் மறையும் 

நேரத்தின் மிச்சம் மீதி 

இந்த மஞ்சள் வண்ணம் ..!

நான் உற்றுநோக்கி எனை தொலைக்கும் நேரம் இந்த மஞ்சள் வானம்..!

 தூரத்தில் இருந்தாலும் அது என்னை தழுவிக்கொள்ளும..!

என் சமூக கோபங்களின் 

துகள்களை சில சமயம்  தூவி விடுவேன் அதன் மஞ்சள் சிவப்பாய் மாறும்..!

 மரணிப்பதில் ஆனந்தமே  அடையாளமாய் அந்த மஞ்சள் வானம் கடலுக்குள் முழ்கும் ..!

மஞ்சள் சிவப்பு இடைப்பட்ட 

வர்ணத்தில் இருந்து கொஞ்சம் 

எடுத்து கொள்வேன் என் அன்பானவளுக்கு சிறிது குங்குமம் ..!






முகப்பருக்கள்

 உன் அழகுக்கு 

முற்றுப்புள்ளி வைக்க 

முயற்சிசெய்கிறது உன் முகப்பருக்கள் அதுவே உன் அழகை கூட்டிவிட கோபத்தில் சுற்றிலும் சிவந்து கிடக்கிறது


உன் கண்களை விட சிறந்த 

கருப்பு வெள்ளை புகைப்படம் வேறேதுவும் இருக்கப்போவதில்லை 

திரும்பி நின்றாலும் உன்னை கவனிக்க வைக்கிறது உன் காது மடலில் வளைந்த முடி 





 

Wednesday, August 23, 2023

வாக்காளன்

 வருமான வரி ஒரு 

சட்ட ரீதியான வழிப்பறி...


சுவர் எழுப்பி

அசுத்தம் மறைப்பது 

ஸ்வச் பாரத் திட்டம் 

.......

 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 

மக்களிடமே சுரண்டி 

மக்களிடமே கொடுப்பது 

நம் மக்கள் நம் மண் திட்டம் 

....

ஆயிரங்களில் வாங்கினால் - அது கடன் ஆயிரங்கோடிகளில் வாங்கினால் வாராக்கடன் !வழங்கு தள்ளுபடி !


அதானிக்கு நட்டம் ..அதனாலென்ன

நம் வரிப்பணத்தில் நாமக்கட்டிகள் தயாரித்து நமக்கே நாமம் போடுவது

 மேக் இன் இந்தியா திட்டம் 


நம்ம பிரச்சனைய பூரா 

தீர்த்துவைக்க இருக்கான் வாக்காளன்





 

.....


கடிதஙகள்

 என் முதல் கடிதத்திற்கு 

உன் பதில் இவ்வாறாக இருந்தது

 "இனிமேல் இதுபோல் கடிதஙகள் கொடுக்கவேண்டாம் அதற்காக கொடுக்காமல் இருக்கவும் வேண்டாம்"

 அன்று புரிந்தது பெண்களால் ஆண்களுக்கு எப்படி பைத்தியம் பிடிக்கிறேதென்று 

.......

நான் எழுத நினைத்து 

எழுதாத கடிதங்களின் 

வெற்று காகிதங்களிலெல்லாம்

 நீயே நிரம்பியிருக்கிறாய் 




உண்மை

 உங்களை வேடிக்கை கூட

 பார்க்க விரும்பாத 

தூரத்தில்  இருக்கிறேன்

 இருந்தும் கதை சொல்கிறீர்கள்..

 அறம் மறந்து புறம் சொல்கிறீர்கள் தெருவில் நின்று குறை கூறுகிறீர்கள்..

 தனிமை வாய்த்தால் எண்ணியவற்றை திணிக்க முயல்கிறீர்கள் ..

எதிர்மறை  கூற்றுகளால் 

நேர்மையை மறைக்கிறீர்கள் ..

இன்றோ நாளையோ என்றோ 

உண்மை தன் முகத்தை தானே காட்டும் 

இயற்கையும் உண்மையையும் பிரமிக்கத்தக்கது !

நம் வெற்று கைகள் அதன் முன்

 தோற்று போகும் !

உண்மை!

பாதைகள் நீளமானதாய் இருந்தாலும் சேருமிடம் சரியானதாய் இருக்கும் 













Monday, August 21, 2023

சந்திராயன்

 வானத்திற்கு அழகாய் 

நிலா மனைவியாய் இருக்க வப்பாட்டியாய் வானவில் எதற்கு ?

சந்திராயனை அனுப்புகிறோம் 

சமரசம் பேச 

எங்களுக்கு சோறு முக்கியமில்லை இஸ்ரோ தான் முக்கியம் 




Sunday, August 20, 2023

உன் பார்வை கணம் தாங்காமல்

 பார்க்கிற தூரத்தில் தானே இருக்கிறாய் பிறகுஎதெற்கு பட்டாம்பூச்சியை தூதனுப்புகிறாய் 

உன் பார்வை கணம் தாங்காமல் 

பாதிவழியில் பூவொன்றில் வைத்து சென்றுவிட்டது !

 

 விசாரணையின்றி விடுதலை தருகிறேன்

 உன் திருட்டுத்தனமான பார்வைகளுக்கு..

 

திருக்குறளை போல உன் பார்வை விளக்கவுரையும் தேவைப்படுகிறது 



பறக்கும் முத்தம்

 பறக்கும் முத்தம் அனுப்பினாயா?

 என் கொல்லைப்புறத்தின் 

காற்று மட்டும் ஈரப்பதமாய் இருக்கிறது !

 

முத்த உலகில்..

 இன்னமும் வறுமை கோட்டிற்கு 

கீழ் தான் உள்ளது 

இந்த பறக்கும் முத்தம் 

இனிமேல் இதை அனுப்ப வேண்டாம் 




Friday, August 18, 2023

உன் கண்ணீர்

 உன் கண்ணீர் ஈரத்தில் 

முளைத்த இந்த கவிதைக்கு 

அதன் அர்ததம் தெரியவில்லை ,தெரிந்தால் மட்டும் என்ன செய்விடப்போகிறாய்

 கேள்விக்குறியாய் உன் புருவம் 




உன்னைவிட

 இரவைத் தேடாத நிலா

ஒரு வேளை

நிரந்தரமாய்ப் போனால்…

நிசப்தங்களின் மத்தியில்

சப்தமாக மனதில்

இன்னமும் ஒலிக்கும்

உன் கொலுசொலி ஒரு வேளை

ஒலிக்காது போனால்…

உன் நினைவு ஏற்படுத்திய

காயங்கள்,

காயங்கள் உண்டாக்கிய

வலிகள்,

வலிகளுக்கு வலி தரவல்ல

என் கவிதைகள்

எனக்கு எழுத வராது போனால்…

ஒரு வேளை பெண்ணே

உன்னை நான் மறந்து போகக்கூடும்…

உன்னைவிடப் பேரழகியை

தினமும் பார்க்கிறேன்..

உன்னைவிட இனியவளை

என்றும் சந்திக்கிறேன்..

உன்னைவிடக் குணத்தவர்கள்

பலரைப் பார்த்திருக்கிறேன்…

உன்னைவிட எல்லாம்…

உன்னைவிட பலரும்..- ஆனால்

உன்னைப்போல ஒருத்தியும்

இங்கில்லையே…!



உன் நினைவுகள்

 இரவு , பகல்

இரண்டைத் தவிர
இன்னொரு பொழுது
இருந்தால் நன்றாக இருக்கும்
அப்போதும் உன்னையே நினைக்க..

என் இமைகள்
மூடும் போது
உன் நினைவுகள்
திறந்து கொள்கின்றன..

உன் நினைவுகள் – மனதில்
ஒடிக்கொன்டிருக்க..
ஒடிக்கொன்டிருக்கும்
மின்விசிறியைப் பார்த்து – தனியாய்
நான் சிரிக்க..
கூடியிருந்த நண்பர் கூட்டம்
கும்மி கொட்டி சிரிக்க..
………..
எல்லா சிரிப்புகளிலும் நீயே..!



மும்பை மழை காலம்

 

மழை காலம் முடிந்துவிட்டதென

குடைகளை நீட்டி மடித்து

வீட்டில் வைத்துவிட்டு வந்தவர்களையெல்லாம்

வைத்து செய்துவிட்டது இந்த மழை

உடைகள் உருகி மழையோடு ஓடாத குறைதான்

ஏழைகளின் எலும்பை தவிர

 ஓடைகள் வகை வகையாய் வாரி சுருட்டிக்கொண்டு ஓடின

கலப்படமாய் போட்ட சாலையையெல்லாம் கரைந்துபோய் 

கவுன்சிலர்களின் (கோ )மானத்தை

மழையில் மிதக்க வைத்துவிட்டது!

ஊருணியில் வீடுகட்டியவரையெல்லாம் யாருநீ என ,

தனக்கான பாதையில்

தனித்து பயணிக்கிறது தண்ணீர்!

பயத்தோடு பார்வயாளர்களாய் மக்கள் !

 



KFC வரிசையில் நானும்

பேரங்காடியும் (mall) நமக்கு ஒரு சுற்றுலா தளம்  தான் 

வேடிக்கையை முடித்துவிட்டு 

வழக்கத்தின் முடிவில் உணவக விடுதிகளில் 

கால்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள சொல்லி 

அடம்பிடித்தது, கூடவே மகளும்.. 

KFC வரிசையில் நானும் ..

வாழையிலை விரித்து 

விருந்தோம்பல் செய்த நமது 

வர்த்தக உணவகங்களை 

உலகமயமாக்களில் தொலைத்துவிட்டு 

இப்போரது வரிசையில் நிற்பது கொடுமை ..


ஒரு டுடோரியல் மாணவனை போல 

உணவின் பெயர்களை மனப்பாடம் செய்துகொண்டேன்..

 உணவே மருந்து என்று  கூவி கூவி 

கற்பித்தவனை, கற்றறிந்த எவரேனும் 

கடக்க நேரிடுமோ என்ற கவலை வேறு ..


இருப்பதிலே விலைகுறைவான 

இரண்டை தேர்வு செய்துகொண்டு,

KFC வரிசையில் நானும் ..


அவன்வேக வேகமாய் எதோ என்னிடம் கேட்க நானும் 

ஆமாம் என்று சொல்லி தொலைக்க..

சிரித்தபடியே என்னிடம் 

 இருமடங்காய் பணத்தை கட்ட சொல்ல 

மறுப்பதற்கு அவகாசம் இல்லாத 

அந்த KFC வரிசையில் நானும்..

அதிகமான சீஸையும் ,

குடிக்க தகுதியில்லாத குளிர்பானத்தையும் 

என் தலையில் கட்டியது தெரியவந்தது

 மீசையில் மண் ஒட்டினாலும் 

ஆரம்பத்தில்   இருந்த கம்பீரத்தோடு 

யாரோ எவரோ என்று கிளம்பு ஆரம்பித்தோம் 

கொள்ளையர்கள் வறுத்த கோழியின்

( KFC) கடையிலிருந்து 



Friday, August 11, 2023

உன் பார்வை

 ஒயின் ஷாப்புக்கு நான்

போவதில்லை – உன்

ஓரப்பார்வை தரும்

போதை எனக்குப் போதும்!


வேரைப் பிரிகின்ற வேளையில்

மண் செய்யும் பிடிவாதம் போல..

என் பார்வை

உன்னோடு ஒட்டிக்கொண்டு போகிறது.


என் அப்பா

ஏதேதோ மெனக்கெட்டுப் பார்த்தார்

பட்ட மரம் தளிர்க்க..

பாவம் அவருக்குத் தெரியவில்லை

உன் பார்வை பட்டால்

பட்ட மரம் தளிர்க்கும் என!



Thursday, August 3, 2023

நெடுஞ்சாலை

 சந்திராயனுக்கு முன்னோட்டம் பார்க்க இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு.. நெடுஞ்சாலை துறை, 

செய்து கொடுத்த தரமான செய்கை!



காதலை நிரப்பி வைப்போம்

 உன் பாதச் சுவடுகள்

பதிந்த மணல் கொண்டும்

உன் விரல் பட்ட

மரக்கிளைகள் கொண்டும்

உன் வெட்கத்தில்

வழிந்த வர்ணம் கொண்டும்

நமக்கான வீட்டைக் கட்டுவோம்…

அதில்

காற்றும் புகாத அளவுக்கு

காதலை நிரப்பி வைப்போம்…!



தினமும்..

 


 தினமும்

ஒருவேளை என் கனவிலும்..

இருவேளை என் கவிதையிலும்..

மூன்றுவேளை உன்னை பார்ப்பதிலும்

புண்ணியம் அடைகிறது - என்

ஒவ்வொரு நாளும்..


கனலை விழுங்கிவிட்டு

தலைகால் புரியாமல்

சுற்றும் பூமியைப்போல..

காதலை விழுங்கிவிட்டு

உன்னையே சுற்றுகிறேன்

ஒவ்வொரு நாளும்..

விதிமீறல்களிலும்..

 தாறுமாறாக ஓடும் 

மண்ணு லாரிகளை கடந்து,

முறையற்ற குப்பை வாகனங்களுக்கு வழிவிட்டு ,

 நகரில் அனுமதியற்ற நேரங்களில் ஓடும் கனரக வாகனங்களை கடந்து,

 வரைமுறையற்ற வேகத்தடைகளை தாண்டி ,

குடிநீர் வாரியம் ,கழிவுநீர் வாரியம்

வாரியம்,வாரியமாய் வாரியிறைத்த சாலைகளை சகித்துக்கொண்டு,

 பிள்ளையை பத்திரமாய் 

பள்ளியில் விட்டுவிட்டு 

கனத்த இதயத்துடன் கடந்து செல்ல நேருகிறது இந்த செய்தியை ..

பள்ளி சென்ற மாணவி விபத்தில் பலி குடும்பமே பலி ! 

எல்லா விதிமீறல்களிலும் ஏதொவொருவரின் வாழ்வு விதி மாற்றப்படுகிறது



Wednesday, August 2, 2023

ஹைக்கூ

 பிறை நிலாவில்

பெளர்ணமியை சூட்டுகிறாய்

உன் நெற்றியில்

 குங்குமம்!


***

சூரியன் கூட

ஓவியம் வரைகிறது

உன் நிழல்!


***

இரவு வானத்தைப் போல

என் இதயம்

எத்தனை பொத்தல்கள்

உன்னால்..!”



மணிப்பூர்

 மாலை ஐந்து மணிக்கு மணியடித்து கொரோனவை விரட்ட முடியாமல்     

மாட்டு மூத்திரம் குடித்து முயற்சித்தோம் 

மணிப்பூராவது மயிராவது !