Saturday, April 8, 2023

தமிழ் சொற்கள்

 உன் பெயரில்  

 ஒரு உயிர்களுத்துக்கள் கூட இல்லையென கடன் கொடுத்த மெய்யெழுத்துக்கள் மத்தியில் கவலையோடு தமிழ் உயிர்களுத்துக்கள்

தமிழ் சொற்கள் தேடிக்கொண்டிருக்கிறன்றன

 நீ திருடி சென்றுவிட்ட

  'ம்' என்ற சொல்லை!

தமிழுக்கு மூன்று காலம் மட்டுமே பிடிக்கும் நீ பேசிய ,பேசுகின்ற, பேசப்போகிற !

உன் நுரையீரல்வரை சென்று ஒப்பந்தமிட்டு

 விலைபேசாமல் வாங்கி கொள்கிறது காற்று!

நீ பேசிய சொற்களையெல்லாம் !




உள்ளூர் பேருந்து பயணம்

 உள்ளூர் பேருந்து பயணம் (கிராமத்து) (ரூட் பஸ் டவுன் பஸ் அவரவர் வட்டாரத்திற்கு ஏற்ப பெயர்கள் பல)


 தற்செயலாகவோ தானாகவோ என் விருப்பமாய் அவ்வப்போது அமையும்! 

 பள்ளி கல்லூரி இருபாலர் நிறைந்த பலவகையான பயணிகளுடன்! பெறுவது தருவது கற்பது பார்ப்பதும் அனுபவமே !

  பருவம் நிறைந்த இருபாலரும் பார்வை போராளிகளாய் !

  பலருக்கு தேரோட்டம் சிலருக்கு போராட்டம்!

   படிவம் மாறாமல் பட்டிக்காட்டு காதல்களம் உயிர்ப்போடு இருக்கிறது!

 இருபது ஆண்டுகளுக்கு முன் என் பெங்களூரு நண்பி ஒப்பந்த அடிப்படையில் காதலிக்க ஒப்புக்கொண்டது உதட்டின் ஓரமாய் உறுத்தல் புன்னகையை வரவழைத்தது !

 மஞ்சள் பூசிய நடுத்தர வயது பெண் நடத்துனருடன்  நடத்திய உரையாடல் பின்னணியில் 

 தீராத உடலா தேன்சிந்தும் கூடலா மம்முட்டியின் மவுனம் சம்மதம் பாடல் ஓடிக்கொண்டிருந்தது!

 இளையராஜாவின் இசை பின்னணி இன்னமும் இன்பசூழல் இழையோடச்செய்தது !

 என்னருகில் இடமிருந்தும் அமரமறுத்த அந்த மூதாட்டிக்கு வேறு வழியில்லாமல் எழுந்து நின்றேன் அவ்வளவு கூச்சம் !

 மேற்க்கூரை இடித்து நின்றவனை ஏரெடுத்து நோக்கியது 

 ஐந்து கண்கள் 

 ஐந்து என்ன கணக்கு? ஓரப்பார்வையை ஒன்றில் தானே சேர்க்கவேண்டும் !

 பாட்டியையும், ஹேர் டையையும் நன்றியோடு நினைத்துக்கொண்டேன்!

 என்னை மறந்து சுற்றம் மறந்த ஒரு குழந்தையின் குதுகூலத்தைப்போல நிறைவான பயணம் !