Wednesday, February 25, 2009

மின்மினி


உன் மேல் காதல் கொண்ட
அந்த பைத்தியக்கார சூரியனை பார்
இரவில் உன்னை வேவு பார்க்க
தன் ஒற்றர்களை அனுப்புகிறது
..
உன் வீட்டை மொய்க்கும்
மின்மினி பூச்சிகள்..!

Tuesday, February 24, 2009

பூவா.. பழமா..?



உன்னை பழத்தோட்டம்
என்று சொன்னால்
பூவாய் மலர்கிறாய் ..
....
பூந்தோட்டம் என்று சொன்னால்
பழமாய் கணிகிறாய்

உன் காலடியில்


நி மரம்
நான் இலை
என்னை நி உதிர்த்தாலும்
சருகாகி ..
உன் காலடியிலே கிடப்பேன் ..!


சிவகாமியின் சபதம்

அந்த கல் பொழுது
விருந்தினருக்காக
என் படுக்கை அறை
ஒதுக்கப்பட்டது
படுக்கையில்
பரப்பி கிடந்த புத்தகங்களை
பக்குவமாய் ஒதுங்கவைத்தார்
அழகாய் அடுக்கினார்
அட்டைப்படத்தை பார்த்தார்
ஆவ என கொட்டாவி விட்டு விட்டு
வந்த வேலையை
மறந்த வேகத்தில் படக்கென்று
மூடி வைத்து விட்டு
உறங்க சென்றார்
நொடி பொழுதில்
மீண்டும் எழுந்து
எதையோ
சிக்கியது
சிவகாமியின் சபதம்
தலையணை தாழ்வாய் இருந்ததால்
அடியில் வைத்துவிட்டு
உறங்க சென்றது அந்த அக்ரினை

இராமர் கோவில்


இங்கே இருப்பதற்கு கூட
வீடு இல்லாதவர்கள்
இராமருக்கு கோவில் கட்ட
கையில் கடப்பாரையுடன்..


நிலா


நிலாதான்
முதலில் உதிக்கிறது
என்று சொன்னால்
யாரும் நம்ப மறுக்கிறார்கள்...
சூரியன் உதிக்குமுன்
நி கோலம் போடுவதை
பார்க்காத சிலர் ..!

Monday, February 23, 2009

ஒரு வரி கவிதை



அழகான..
ஆழமான..
நெளிவான..
நெகிழ்வான..
நளினமான..
உருவகமாக..
உயிரூட்டமாய்..
உன்னைப்பற்றி..
ஒரு பக்க கவிதை கேட்டாய்
எனக்கோ
ஒருவரி கவிதைதான்
தெரிந்தது..
அது உன் பெயர் தான்..!


panithuli


பனித்துளி
காலை வேளை
சூரியன் கூட
தேனிர் குடிக்கும்..
புல்வெளியின் பனித்துளியை ..!

mithavaiyi pootha malarkal


மத்தாப்பூ

கந்தக கிடங்குகள்
எங்கள் வகுப்பறைகள் ..

திக்குச்சிகளை எண்ணி எண்ணி
கணக்கு கற்று கொண்டோம் ..


சாதத்தின் சுவைக்கு சிறிது
விசத்தையும் பிசைந்துகொள்கிறோம் ..

உயிர் வாழ்வதற்கு
கூலி கொடுக்கிறிர்கள்
நாங்கள்
கூலிக்காக உயிர் விடுகிறோம்..


விடிந்தால் எங்கள்
வாழ்க்கை போவது
இருளை நோக்கி..

பட்டாசு விபத்தில்
பலியான பிள்ளைக்கு..
கொல்லி வைக்கபோகிறேன்
கொளுத்துங்கள் மத்தாப்பூ
நன்றாக ..!