Wednesday, March 29, 2023

பண்பலை



 மிகுதியான அந்த போக்குவரத்து நெரிசலினால் ஏற்பட்ட மனஉளைச்சலை குறைக்க பண்பலையை விருப்பமாய் திருப்பினேன் !

திருப்பிய அலைவரிசை அனைத்திலும் 

வரிசையாய் விளம்பரங்கள் !

ஆர்ட் அட்டாக்கிற்கு எங்ககிட்ட வாங்க!

 புள்ள குட்டி பொறக்கலயா இங்க கூட்டிட்டு வாங்க !

நாங்க இருக்கோம்!

 இன்னைக்கு இருக்கிற நீங்க 

 நாளைக்கே புட்டுக்கிட்டா (என்னையவே சென்னை மொழி எழுத வச்சிட்டாங்க )

 எடுங்க மெடிக்கல் பாலிசி..!? சென்னைக்கு அருகில் திண்டிவனத்தில் வீடு வாங்கி,

 லோன் வாங்கி , லோலோனு செழிப்பா இருங்க.. 

 போதும்டா சாமி னு அரசாங்க பண்பலையை திருப்புனா 

 சொத்து வரி, கழிவுநீர் வரி கட்டிடீங்களா ?

 சோத்துக்கே வழியில்லை சொத்து வரியாம் னு நொந்து 

 கடைசி வர எந்த அலைவரிசையிலும் பாட்டே போடல மனஉளைச்சலுக்கே உளைச்சல் கொடுத்துட்டானுக !

சுற்றுசூழல்

 சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றிபாடம்எடுக்கின்றனர்

 ஏரி நீர் நிலைகளை அழித்து கட்டிய கல்லூரிகளில்!