கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
நிறைய நிராகரிப்புகளுக்கு
பழகிய மனது
நிச்சயம் கோபத்தை தழுவாது
மகிழ்ச்சியாய் இருப்பதற்கு
மறதியை பழகினால் போதுமானது
ம்
என்பது நீண்ட உரையாடாலின்
குட்டி கவிதை
மழையில்லாமல் நனைதல்
முற்றுப்பெறாத சொல்லின்
துவக்கப்புள்ளி
ஐ மிஸ் யு என்பதை தமிழில்
எப்படி சொல்ல
உன்னை நினைக்காத நிமிடம்
எனக்கு மரணமாய் இருக்கவேண்டும்
நீண்ட வருடங்களுக்கு பிறகு
உன் உரையாடல் என்பது
வறண்ட வயக்காட்டில்
வெள்ளம் வந்தது போல்
மூழ்கினாலும் சாகமாட்டேன்
இருபத்திமூணு நேர
உரையாடலில் போகிற போக்கில்
உங்களை எனக்கு பிடிக்காது என்கிறாய் நல்லவேளை பிடித்தவர்கள் பட்டியலில்
நான் இல்லை
அதற்கும் மேலானவன் என்று பொருள்