Thursday, August 19, 2010

நீ, நான், நிலா

நிலா பிறந்து
மூனே நாளான அந்த
மாசி மாதத்தில்
மூன்றாம் பிறை அளவே தெரிந்த
அவள் முகத்தை
முழுவதுமாய் உள்ளிழுத்துக்கொண்டாள்
எனைக் கண்டு...
அந்த மாசி மாத திருவிழாவில்
அழைக்கப்பட்ட திடீர் விருந்தாளியாக
அவள் வீட்டுக்குள் நான்...
அழைக்கப்படாத விருந்தாளியாக
என் மனதுக்குள் அவள்..!

ஆனி மாதத்தில் அன்று
பாதி பெளர்ணமி
பள்ளி செல்ல ஆரம்பித்தது
அந்த பாரிஜாத பூங்கா...
படி படியாய் ரசித்தேன்,
படியில் நின்றபடியே ரசித்தேன்,
கொலுசை,கம்மலை.மூக்குத்தியை.,
சிரிப்பை, முறைப்பை, செருப்பை.,
சிறுக சிறுக சேமித்தேன்.,
மூட்டை மூட்டையாய் எழுதி,
தமிழ் பூட்டு போட்டு பூட்டினேன்..,
பாதி காதல் பற்றிக்கொண்டு வளர்ந்தது..
மார்கழி மாத பனியும்
முழுமதியின் சாரலும்
காதலை சொல்லிட சொல்லி
அடம் பிடித்தன...
மடை திறந்த வைகையாய்
கொட்டி விட்டேன் மனதை...
தமிழை விட வேறு தூது...
தமிழ் சுவை விரும்பாத பெண்
எனெக்கெதுக்கு..?
அன்று மறுத்திருந்தால்
அன்றே மறந்திருப்பேன்...
கவிதையின் கைக்குழந்தைக்கு
தமிழைப் பிடிக்காமல் போகுமா?
என்னையும் பிடிக்குமென்றால்..!
தை மாத திங்கள்களில்
காதல் பொங்கி பொங்கி வழிந்தது...
என் தேவதையின் இல்லம்
எதிரிலே இருந்தும்
நேருக்கு நேர் நாங்கள்
பேசிக்கொண்டதில்லை... ஆனால்
உயிருக்குள் உயிர் மாற்றிக் கொண்டோம்..!
சூரியனும் சந்திரனும்
சபிக்கும் வரை பேசிக்கொள்வோம்
தொலைபேசியில்..!
இனிக்க இனிக்க
நினைவுகளை குடித்துக்கொண்டோம்...
கனவுக்குள்..!
நெடுந்தொடர்களில் வரும்
கடும் வில்லிகளைப் போல
எங்கள் கதைக்கும்...
புரணி பேசுவதை
பொழுதாக கொண்ட சிலர்..
என்னை வேரு ஒரு பெண்ணுடன்
கூறு போட்டு வித்தனர்..
சந்தேகம் கொண்டாள்..
கங்கையை பற்றி
கண்ட கண்ட சாக்கடைகளிடம் போய்
விசாரித்தாள்..
விரக்தியும்.. குழப்பமுமாய் இருந்தவள்
வீட்டிலும் மாட்டிக் கொண்டாள்..
வழக்குகள், வாதங்கள்..
சாதி மதத்திற்கு
தூபம் போட்டனர்..
சந்தேக கணலுக்கு
சாம்பிராணி போட்டனர்..
கவிஞனுக்கு
கயவன் முத்திரை இடப்பட்டது..
கன்னியவள்
முகத்தை திருப்பிக் கொண்டாள்..
கனவுகள் பறிக்கப்பட்டன..
காயம்பட்ட நினைவுகளுடன்
துனைக்கு என் நிலாவை தேடினேன்..
.....
அன்று மாசி அமாவாசை..




 

Monday, August 16, 2010

திட்டியே தீருவேன்

உன் மீது கோபம்
வரும் போதெல்லாம்
உன்னை திட்ட வேண்டும்
என நினைத்து
கடுமையான வார்த்தைகளை
தேடி பிடித்து
துணைக்கு வைத்துகொண்டு
தொண்டையை கடுமையாக்கி ...
தொலைபேசியை ..நெருங்கும்போதே
நொறுங்கி விடுகிறது என்
குரல்வளை ..
உன் குரல் கேட்ட
அடுத்த நொடியே
கடுமையான வார்த்தைகள்
கவிதையாய் மாறிவிடுகின்றன ...
................?!?!?!
இருக்கட்டும்
என்றாவது ஒருநாள்
உன்னை திட்டியே தீருவேன்
..இனிமையாக..