Monday, March 30, 2009

இதயம்


எனக்குள்
இதயம் இருப்பது
நான் விபரம் அறிந்த
நாள் முதல் அறிவேன்
என்
இதயத்திற்குள்
நீ இருப்பது
உன்னை பார்த்த பின்புதான்
தெரிந்துகொண்டேன் ..!

Monday, March 23, 2009

கூட்டணி தர்மம்

அரசியலில்
நிரந்திர நன்பனும் இல்லை
நிரந்திர எதிரியும் இல்லை நிரந்திர ஏமாளி மட்டும் உண்டு
ஓட்டு போடுபவன்..!

விதவிதமான அறிக்கைகள்
வித விதமான விருந்துகள்
விதவிதமான பல்டிகள்
விடிந்தால் தெரியும்
கூட்டணி பேரம்..!

கோழி ஆடு மாடு விற்க
சந்தைக்கு கொன்டுவருவதுபோல
கொள்கைகளையும்
கொன்டு வருவார்கள்
கூட்டணி பிடிக்க..!

அது போன மாசம்
நான் சொல்றது இந்த மாசம்
நல்லா கேட்டுக்கங்க
அடிகடி கேட்கலாம்..!

தலைக்கு மேலே கைகளை தூக்கி
இருக பற்றி
சிரித்துக்கொண்டே
கீழே
யார் காலை யார் வாரப்போகிறார்களோ!

கேட்ட இடம் கிடைக்கலையா
கூடாரத்தை மாத்து
துட்டு கூட கிடைக்குதா
தூக்கு கூடாரத்தை..!

வாழ்க்கையில் தோல்வியா..?

தொழிலில் நஷ்டமா..?
தொடங்கு ஒரு கட்சி
கூட்டணி போடு
கோடிகள் கொட்டும்..

இங்கே
நிரந்திர நன்பனும் இல்லை
நிரந்திர எதிரியும் இல்லை
நிரந்திர ஏமாளி மட்டுமே உண்டு
ஓட்டு போடுபவன்..!

Sunday, March 22, 2009

கொல்கத்தா



எந்த அரசியல் பேனரும்
என்னை வரவேற்கவில்லை
கட் அவுட்கள்
காலில் விழுந்துவிடுமோ
என்ற பயமும் இல்லை


சாலையெங்கும்
புகையிலை கோலம்
காலையில் எழுந்தவுடன்
க்யூவில் நிற்கும் கூட்டம்
ரேஷன் கடையோ
பால்பூத்தோ இல்லை
மிட்டாய் கடையில்

அம்பது பைசாவுக்கு மேல்
அதிகம் கேட்காத ஆட்டோகாரர்
ஒரு ருபாய் கூட கொடுத்தால்
கும்பிடு போடுகிற ரிச்ஷாகாரர்

அழகு கலை கூடங்களோ
சிற்பம் நிறைந்த கோவில்களோ இல்லை
வங்கத்து பெண்கள் இருக்க
இவையெல்லாம் எதற்கு..?

கவலைப்படாத கடைக்காரர்கள்
பொறுமையான வாடிக்கையாளர்கள்
ஊர்தான் குப்பையாக இருக்கிறது
உள்ளம் சுத்தமாக இருக்கிறது..

வங்காளம் என்று
வந்துவிட்டால் ஒன்றுகூடி விடுவார்கள்
கவிஞர்கள் நிறந்த ஊர்தான்
கூடவே கவிதைகளும் வள்ர்வதால்..

ஷேர் ஆட்டோவில்
செல்லும்போது அருகில் இருப்பவர்
சட்ட மண்ற உருப்பினராகவோ
கவுன்சிலராக கூட இருக்கலாம்..

மாநிலத்தில் நடப்பது
கம்யூனிஸ்ட் ஆட்சியென்றால்
வீட்டில் நடப்பது பெரும்பாலும்
காளீயின் ஆட்சிதான்..

குப்பத்து பெண்ணோ, குடும்பத்து பெண்ணோ
கோடிஷ்வரபெண்ணோ
பேதம் பார்ப்பதில்லை
திருவிழா என்று வந்துவிட்டால்
தெருவில் போடும் குத்தாட்டம்
இதற்கு சாட்சி..
சமுதாயம் சாடுமோ
சம்பந்தி திட்டுமோ என்ற கவலையில்லாமல்
அவர்கள் ஆடுகிற அழகு முக்கியமில்லை
அந்த சுதந்திரம் அழகானது..!

ஒரு கோப்பை தேனிர்
ஒரு கட்டு பீடி
பொறியல் மீனும்
போதுமென வாழ்கிற வர்க்கம்..!

பெண்


ஒரு பெண்ணின்
கருவிலே உருவானாள்
ஒரு பெண்
பூமியில் பிறந்தாள்
புன்னகையும் அற்றவளாய்

வெறுப்பு பார்வையின்
அரவணைப்பில்
வளர்ந்தாள்
பள்ளி பாடங்களில்
தேய வேண்டியவள் பாத்திரம்
தேய்த்து கொண்டிருந்தாள்

வயதுக்கு வந்தவுடன்
வந்தனம் சொல்லியது
மிச்சம் இருந்த சுதந்திரம்

திருமண சந்தையில்
திருப்திகரமான விலைக்கு
விற்க்கபட்டாள்

இங்கே அவளுக்கு
பதவி உயர்வு
பகலில் வீட்டை
இரவில் கனவனை கவனித்துக்கொள்ள

மகன் வளர்ந்தான்
இவள் தேய்ந்தாள்

மருமகளின்
மறு ஆட்சி வந்தது
இவளோ பொறுத்தாள்
மறுமகளோ வெறுத்தாள்
விளைவு

முதியோர் இல்லம்
அவளது முதுமைப்பருவம்
முடிந்தவனையும் மறந்துவிட்டாள்
மூச்சையும் மறந்துவிட்டாள்..
முகம் பார்க்க வந்த மகன்
முடிவான பள்ளத்தில்
மூடிவிட்டு சென்றுவிட்டான்..
(நான் கவிதை என்று எழுத ஆரம்பித்த போது எழுதிய முதல் கவிதை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது எழுதியது)

Thursday, March 12, 2009

பாவையின் பார்வை


சூரியன் தொலைந்து போனதால்
சூழ்நிலை கருப்பு கொடிபிடித்திருந்தது
பேருந்து பயணம்
மனதிலோ மயானம்

தீண்டும் தென்றலை
தேக ரோமங்கள் எட்டி பார்த்தன
கருப்பு போர்வைக்குள் - பாவையின்
பார்வை என் மேல்
ஓரவிழிகளால் உளவு பார்த்தேன் - என்னை
உறித்திக்கொண்டு பார்ப்பதை
உறுதி செய்தேன்

மெல்ல போர்வையை விளக்கினால்
தெள்ள தெளிவான முகம்
இரவு நேரத்தில்
உருவம் தெரியவில்லை
இறங்கி நடந்தேன்
உறைவிடம் நோக்கி
இன்னும் பின் தொடர்ந்தாள்

உறைந்து போனது மனம்
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
வாசல் திறந்து வைத்தேன் - அவள்
வரவில்லை..
மனமுடைந்து முற்றம் நோக்கினேன்
அங்கே கூரை மேல் அவள்
அந்த நிறைமதி..!
மீண்டும் என்னை எட்டி பார்த்தது..

Tuesday, March 3, 2009

என் இதயம்


உடைந்து போன
கண்ணாடி துகள்களை போல
என் இதயம்
நி வந்து முகம் பார்த்தால்
ஒவ்வொரு துகளிலும்
உன் முகம் காட்டுவேன்
உடையாமல்..!

அந்நிய முதலிடு


பூச்செண்டு கொடுத்து
வரவேற்போம்
எங்கள் தற்கொலை
விவசாயிகளின்
கல்லறை பூக்களை கொடுத்து..!

தயாராய் இரு


தமிழ் குடிமகனே
தயாராய் இரு
ஓட்டு கேட்டு வருகிறோம்..

கொல்லைப்புறத்தில்
கொள்ளையடித்து
வாசல் வழியே
இலவசமாய் கொடுப்போம்
தயாராய் இரு

சாதிக்கு சானை பிடித்து

மதத்துக்கு உரம் போட்டு
ஓட்டு கேட்டு வருகிறோம்
தயாராய் இரு

அண்ணாச்சி கடைக்கு
பாடை கட்டி விட்டு
அம்பானி கடை
திறந்து வைப்போம்
தயாராய் இரு

ஒருமுறைதான் வருவோம்
ஒழுங்கா பார்த்துக்கோ
ஓட்டு கேட்டு வருகிறோம்
தயாராய் இரு..!

பூசணிப்பூ


கோலம்

சாணி

பூசணிப்பூ

உங்கம்மா

உங்கப்பா

நீ ..