
சூரியன் தொலைந்து போனதால்
சூழ்நிலை கருப்பு கொடிபிடித்திருந்தது
பேருந்து பயணம்
மனதிலோ மயானம்
தீண்டும் தென்றலை
தேக ரோமங்கள் எட்டி பார்த்தன
தேக ரோமங்கள் எட்டி பார்த்தன
கருப்பு போர்வைக்குள் - பாவையின்
பார்வை என் மேல்
ஓரவிழிகளால் உளவு பார்த்தேன் - என்னை
உறித்திக்கொண்டு பார்ப்பதை
உறுதி செய்தேன்
மெல்ல போர்வையை விளக்கினால்
தெள்ள தெளிவான முகம்
இரவு நேரத்தில்
உருவம் தெரியவில்லை
இறங்கி நடந்தேன்
உறைவிடம் நோக்கி
இன்னும் பின் தொடர்ந்தாள்
உறைந்து போனது மனம்
சுற்றும் முற்றும் பார்த்து விட்டு
வாசல் திறந்து வைத்தேன் - அவள்
வரவில்லை..
மனமுடைந்து முற்றம் நோக்கினேன்
அங்கே கூரை மேல் அவள்
அந்த நிறைமதி..!
மீண்டும் என்னை எட்டி பார்த்தது..


No comments:
Post a Comment