Wednesday, April 29, 2009

கணக்கு பாடம்


எதிர்பாராமல் பார்த்தேன்
எழுத்தில் அடக்க முடியாத அழகு அவள்
எனது கைக்கடிகாரத்தை பார்த்தேன்
கணக்குப்போட்டேன்
மறுநாள்.அதே நேரம்..அதே இடம்..அதே அழகு..
கணக்கு சரியாய் போனது..

அவள் என்னை பார்க்கவில்லை என்றென்னி..
அவளை பார்வையால் உறிஞ்சினேன்..
சட்டென்று என் பக்கம் திரும்பி
அனல் பார்வையால்
பட்டென்று பொசுக்கிப்போட்டாள்..
கணக்கு தவறியது .!

வேறொருநாள்
வேண்டுமென்றே வேறுபக்கமாய்
வெறுப்பாய் பார்த்துக்கொண்டிருந்தேன்..
அவள் விழியால் என்னை அளந்தாள்..
நான் திரும்பியவுடன்
அவளை திருப்பிக்கொண்டாள்..
கணக்கு சரியாய் போனது.!

பல்வரிசை பயத்தால்
ஆயிரம் தந்தியடிக்க
ஒரு ஹாய் சொன்னேன்..
ஹலோ சொன்னாள் கூலாக..
எதோ பேச நினைத்து..
எதேதோ பேசினேன்..

அன்றுமுதல் அனைவருக்கும் அழகாய் தெரிந்தேன்..
அடிக்கடி தலை வாரினேன்..
தனிமையில் சிரித்தேன்..
தாய்மொழி தடுமாறியது..
தெளிவான பைத்தியமய் திரிந்தேன்..

கணக்குப்பாடம் எனக்கு பொது எதிரி ஆனது..
காதல் கணக்கோடு கூட்டணி வைத்தேன்
ஒரு வருடம் ஒடி முடிந்தது..
அடுத்த வருடம் அவளுக்காய் காத்திருந்தேன்..
அவள்வரவில்லை.. வரவேயில்லை..

துக்கமான பகல்கள்
தூக்கமில்ல இரவுகள்.. என் நாட்கள் ஓடின..
தூசிபடிந்த புத்தகத்தை
தேடி எடுத்தேன்..ஆனால்
தூரத்தில்
தொலைந்தேபோனது
என் கணக்குபாடம்.!

Wednesday, April 22, 2009

ஒரு இனம் இரு விசாரிப்புகள்


அமேரிக்காவிலிருந்து தமிழகத்துக்கு ஒரு
அலைபேசி அழைப்பு..

நல்ல வேளை மாமியாருக்கு
பைத்தியம் பிடிச்சிடுச்சு..
இல்லையினா என்னாயிருக்கும்?

குமாருக்கு ஏன் இந்த
குறுக்கு புத்தி?

பாவம் பாவனா அவனை கட்டிக்கிட்டு
எவ்வளவு பரிதவிக்கிறா?

சித்தியை காதலித்த அவ பெரியப்பா
இப்போ என்ன பன்றார்?

விசாரிப்புகள் தொடர்கிறது..
நெடுந்தொடர்களில் வரும் கதாபாத்திரங்கள்
பற்றிய விசாரிப்பு..

கனடாவிருந்து இலங்கைக்கு ஒரு
தொலைபேசி இனைப்பு..

அப்பாவுக்கு இப்போ பல்வலி
எப்படி இருக்கு?
.... இனிமேல் எந்த வலியும் தெரியப்போவதில்லை...
.... தம்பி எங்கு இருக்கிறான் ?
நன்றாக இருக்கிறான.?
.. இருக்கலாம்..இருந்தால்..

....கண்ணீரில்லாத அழுகை
ஒருவேளை அழுது அழுது
கண்ணீர் சுரப்பிகள்
நின்று போயிருக்க கூடும்..

Monday, April 20, 2009

எனக்கொரு குழந்தை பிறந்திருக்கிறது


புரியாத ஒரு பாடத்தை
குறிப்பெடுத்துக்கொண்டிருந்த - ஒரு
குருகிய காலத்தில் எனக்கொரு
குழந்தை பிறந்திருக்கிறது - அந்த
குறிப்பேட்டின் நடுப்பக்கத்தில்..

எனக்கு பிறந்த குழந்தையை
எல்லாருக்கும் எடுத்துக் காட்ட ஆசைதான்..
ஆனால்..
அது உனக்கு சோறுபோடாது என்று
என் உடன்பிறந்தவர்களும்..
அவள் எவள் என
ஏளனம் செய்ய ஊராரும் காத்திருப்பர்..

என் குழந்தையை
எந்த பத்திரிக்கையும்
பிரசுரம் செய்யாது..
அதற்கு நான் சினிமாவிலோ..
சங்கத்திலோ.. சேர்ந்து
பாட்டெழுதியிருக்க வேண்டும்..
இங்கே படைப்புகளுக்கு அல்ல..
படைப்பாளிகளுக்கே முக்கியத்துவம்
கொடுக்கப்படுகிறது..

கருவிலுருந்த குழந்தையை
மீண்டும் கருவுக்குள்ளே.. வைத்து
திணித்து வைத்ததைப்போல..
என் கவிதை காத்துக்கிடக்கிறது.
அந்த குறிப்பேட்டின் நடுப்பக்கத்தில்..

Saturday, April 18, 2009

எயிட்ஸ்

உங்கள் கல்லறைக்கு நீங்களே
செங்கள் சேமிக்கிறீர்களே..
சுடுகாட்டிற்கு நீங்களே
சுள்ளிகளை பொறுக்கிகொள்கிறீர்களே.!

சுகத்தை நாடிச்சென்று -
நடமாடும் சவமாய் திரும்புகிறீர்களே.!

ஒருநிமிட சலனத்தில்
தேடி வருகிறதே மயாணம்..!

சிவப்பு விளக்கு பகுதிகளால்
உங்கள் இதய வாகனம்
நின்று போகக்கூடும்..!

விளைவு தெரியாமல்
மாட்டிக்கொண்டால்
விதி என்று விட்டு விடலாம்..
தெரிந்தே மரணக்கடலில்
விழுவதும் எதற்கு?- உங்கள்
விதையையும் வீனாக்குவதும் ஏனோ?

மாற்றான் தோட்டத்து
மல்லிகை அழகாய்தான்
பூத்திருக்கும் - கூடவே
மரனமும் காத்திருக்கும்..!

Friday, April 10, 2009

வீட்டுக்குள் மழை


நீங்கள்
நடக்கவே யோசிக்கும்
நடைபாதையில்
வீட்டையே வைத்திருக்கிறோம் ..
வீட்டுக்குள் மழை
எப்படி பெய்யாமல் போகும் ..
உங்கள் வீட்டு
குப்பை தொட்டியைவிட
மோசமாக இருக்கிறது
எங்கள் வீடு..
எங்கள் வாழ்க்கை
வெளிச்சமாக இருக்கிறது
கார்ப்பரேஷன் விளக்குகளால்..

அதிர்ஷ்டம்..ஜோசியம்..
எல்லாம் உண்மைதான்
வாசல்கதவே இல்லாத
எங்கள் வீட்டை
எப்படி அதிர்ஷ்டலக்ஷ்மி
தட்டுவாள் ..?

பகலில் வாகனங்களும்
இரவில் பசுமாடுகளும்
பார்க்கிங் செய்துகொள்கின்றன..

வீட்டுக்குள் மழை..!
தலைப்பு நன்றாக இருக்கிறது
சன்மானம் கூட உங்களுக்குத்தான் .!