Saturday, September 26, 2009


உச்சி வெயிலில் பெய்யும்
மழையை போல ஒரு
மதிய உணவு இடைவெளியில்
தனியாக வருகிறாய் ..

இந்த பிறவியில் என்னை நீ
கடந்து போவதற்காகவே
அமைந்தது போல
உன் வீடும் என் தெருவிலே..

பூவோடு கதையையும்
சேர்த்து பின்னுகிற பூக்கடைப்பென்..
பேருந்துக்காக.. காத்திருக்கிறவர்கள்
யார் யாரோ எது எதற்காகவோ
காத்திருக்கிறார்கள்..
நான் உனக்காக..

உன்னை கண்டதும்
உள்எழுகிற பூரிப்பு சுனாமியென
மேல் எழும்புகிறது..
உதடுகளை உடைத்து
அவை வெளியேறி விடாமல்..
கண்களின் வழியே வழிய விடுகிறேன் ..
சுற்றியிருக்கும் எந்த
கண்களுக்கும் தெரியாமல் ..

ஒளியின் வேகத்திற்கு
சற்று குறைவான நொடிப்பொழிதில்
உன் கண்களின் வழியே அதை
உள்வாங்கி கொள்கிறாய் ..

பேராழி பிரளயம் ஒன்று
நடந்து முடிந்த சுவடேதும்..
இல்லாதது போல
இருக்கிறது
நம் அக்ரகாரத்து தெரு

Tuesday, September 22, 2009

வாசலை சுத்தம் செய்வதற்காய்
வந்து போகிறாய்
என் மனம் குப்பையாய் போகிறது..

நான் காத்திருக்கும் பொழுதுகளில்
வாசலை மட்டுமின்றி
வீதியையும் சேர்த்து பெருக்குகிராய் ..

உன்னால் ஒதுக்கப்பட்ட
குப்பைகள் கூட
குதுகூலமாய் ..

வெருங்கைவிரல்களால்உன்
வாசல் கதவை மூடிவிட்டு
கண்களால்
என் வீட்டு வாசல்
கதவை திறந்து வைத்துபோகிறாய்..!