Monday, January 18, 2010


ஒரு நாள்
திருவிழா திருநாள்
அம்மன் வீட்டை விட்டு
வெளியே வரப்போவதாக
ஆலயமணிகள் ஒலித்துக்கொண்டிருந்தன
நீயும் வெளியே வந்தாய்..

உடண் உன் பாட்டி..

கதம்பம், கணகாம்பரம்
செவ்வந்தி, சாமங்கி எனப்பல
உயிரற்ற மலர்களின்
பெருமூச்சின் மத்தியில்..நீ
கடந்து சென்றாய்..
இரண்டுமுழ மல்லிகையை
உன் பாட்டி உனக்கு சூட்டிவிட
மல்லிகைக்கும் அன்றுதான் திருவிழா..
மலர்சூடும் வைபவத்தை
மாடியில் நின்றவாறே நான் ரசிக்க..
நொடிப்பொழுதில் நீயும் பார்த்து விட..

இம்முறை வெட்கத்தை சூடிக்கொண்டாய்..!

நம் பார்வை தேரோட்டத்தை
பார்த்துவிட்ட மல்லிகைகளில் இரண்டு
மணமுடைந்து தற்கொலை செய்துகொண்டன
உன் கூந்தலிலுருந்து..

Wednesday, January 6, 2010

பாரிஜாத பூ கிளம்பி
போய்விட்ட வருத்தத்தில் உன்
பள்ளிக்கூடம்.
மாலை வெயில்தான் என்றாலும்
மேகம் உனக்காக
குடை பிடித்து வருகிறது..
உன் நிழலை சுமந்தபடி
உன்னுடன் வரும் உன் தோழி..

முதுகில் புத்தகமூட்டையையும்
கண்களில் கவிதையையும்
சுமந்து வருகிறாய்..
எதிர்வீட்டிலிருக்கும்
என்னிடம் கவிதைகளை
இறக்கி வைத்துவிட்டு
புத்தகங்களை உன்னுடன் எடுத்துசெல்கிறாய்..


வாசல் சென்றதும்  தோழிக்கு
வழியனுப்புவது போல எனக்கும்
ஜாடையில்.. காட்டுகிறாய்..
தோழிக்கு வழியனுப்பு..
எனக்கு உள் அழைப்பு.
நீ விடை கொடுக்கும்
அந்த நொடியில் ஆரம்பிகிறது

எனக்கான அன்றைய நாள்..!