Wednesday, April 22, 2009

ஒரு இனம் இரு விசாரிப்புகள்


அமேரிக்காவிலிருந்து தமிழகத்துக்கு ஒரு
அலைபேசி அழைப்பு..

நல்ல வேளை மாமியாருக்கு
பைத்தியம் பிடிச்சிடுச்சு..
இல்லையினா என்னாயிருக்கும்?

குமாருக்கு ஏன் இந்த
குறுக்கு புத்தி?

பாவம் பாவனா அவனை கட்டிக்கிட்டு
எவ்வளவு பரிதவிக்கிறா?

சித்தியை காதலித்த அவ பெரியப்பா
இப்போ என்ன பன்றார்?

விசாரிப்புகள் தொடர்கிறது..
நெடுந்தொடர்களில் வரும் கதாபாத்திரங்கள்
பற்றிய விசாரிப்பு..

கனடாவிருந்து இலங்கைக்கு ஒரு
தொலைபேசி இனைப்பு..

அப்பாவுக்கு இப்போ பல்வலி
எப்படி இருக்கு?
.... இனிமேல் எந்த வலியும் தெரியப்போவதில்லை...
.... தம்பி எங்கு இருக்கிறான் ?
நன்றாக இருக்கிறான.?
.. இருக்கலாம்..இருந்தால்..

....கண்ணீரில்லாத அழுகை
ஒருவேளை அழுது அழுது
கண்ணீர் சுரப்பிகள்
நின்று போயிருக்க கூடும்..

No comments:

Post a Comment