வானம் வெட்கத்தில்
மேகத்தில் மறையும்
நேரத்தின் மிச்சம் மீதி
இந்த மஞ்சள் வண்ணம் ..!
நான் உற்றுநோக்கி எனை தொலைக்கும் நேரம் இந்த மஞ்சள் வானம்..!
தூரத்தில் இருந்தாலும் அது என்னை தழுவிக்கொள்ளும..!
என் சமூக கோபங்களின்
துகள்களை சில சமயம் தூவி விடுவேன் அதன் மஞ்சள் சிவப்பாய் மாறும்..!
மரணிப்பதில் ஆனந்தமே அடையாளமாய் அந்த மஞ்சள் வானம் கடலுக்குள் முழ்கும் ..!
மஞ்சள் சிவப்பு இடைப்பட்ட
வர்ணத்தில் இருந்து கொஞ்சம்
எடுத்து கொள்வேன் என் அன்பானவளுக்கு சிறிது குங்குமம் ..!




No comments:
Post a Comment