தயங்கி தயங்கி நான் பேச ஆரம்பித்ததும்
வேக வேகமாய் நீ திசை திருப்புவாய்
இன்ஸ்டாவின் நான் நுழையும் நேரம்
ஷார்ச்சாட் கு தாவிவிடுவாய்..
முன்பெல்லாம் முதல் முப்பது நபர்க்குள் இருந்த நீ
இப்போது இருநூற்றி முப்பத்தைந்தாவது நபராக இருக்கிறாய்
வாட்'ஸ் ஆப் ல் ஸ்டேட்டஸ் பார்ப்பதில்
அதுவும் இல்லை சில நாட்களில்
குறுந்செய்தியில் வணக்கம் வைத்தால்
படிப்பதையே நிறுத்திவிடுகிறாய் -அந்த
ப்ளூ டிக் என்னை படுத்திவிடுகிறது ..
அலைபேசியின் அத்தனை செயலிகளிலும்
என் சொற்கள் செயலிழந்து கிடக்கின்றன
ஆனாலும் என் விரல்கள்
நேசக்கரம் நீட்டியபடியே
எல்லாம் ஒரு கைப்பிடி அன்பை பகிர்ந்துகொள்ளத்தான் !



No comments:
Post a Comment