உனக்காக பரிதவித்தது போதும்
என முடிவெடுத்துவிட்டேன்..
மழை துளியின் வழியே அந்த
வர்ணங்களை பிரிப்பதெப்படி ..
உன் சிறுவிரல் பிடித்து
காலை வெளிச்சத்தின் நறுமணத்தை காட்டிட..
மின்மினிகளின் உலகத்தில்
உனக்கான மின்னேற்றியை கொடுத்திட ..
காற்று இல்லா உலகில்
கவிதை நிரப்பி வாழ்ந்துவிட ..
ஒரு குழந்தையின் குதுகுளத்துடன்
எப்போதுமே நடந்திட கூட ஒரு
புன்முறுவலுடன் நடந்ததை ஏற்றிட..
ஏரிக்கரை அடர் மர நிழலில்
உரையாடலின் பின்பகுதியில்
அயர்ந்து உறங்கிட ..
நிராகரிப்பின் வழிகளை
சிறுவிரல் கொண்டு உதறிவிட ..
அடர்ந்த வானகத்தில் தனிமையின்
அமைதியை ரசித்திட ..
பூமியை ஒரு புள்ளியென எடுத்து
எழுதி விளையாடிட ..உனக்காய் பரிதவித்தேன்
நீயோ மரணமெய்த உடல் கொண்டு
என் உணர்வுகளை உயிரற்றதாய்
உதிர்த்துப்போட்டு வேடிக்கை பார்க்கிறாய் ..
உனக்காய் பரிதவித்தது போதும்
என முடிவெடுத்துவிட்டேன்.



No comments:
Post a Comment