Saturday, October 7, 2023

விழிகளோடு பயணிக்க

 உன் விழிகளை பார்த்தால் என்ன தோணும் 

விடைத்தாளை கொடுத்து கேள்வியை 

எழுதச்சொன்னதுபோல இருக்கிறது !


உன் விழிகளோடு பயணிக்க அதன் 

அர்த்தம் தெரியவேண்டிய அவசியமில்ல 


 என்ன தோணும் என்று சிந்திக்க வேண்டியதில்லை

  அதுஉடனே பயணிக்க வேண்டும்


 ஒரு பட்டாம்பூச்சியை போல அது 

அங்கும் இங்கும் பறந்து எண்ணில் 

தஞ்சமடையும் போது ரசித்து கொள்வேன்


 முன்னிலும் அழகாக அது மாறியதன் 

ரகசியத்தை தேடுவேன் 


அதன் வெளிச்சத்தின் வழியே 

உன்னுடைய குறுந்செய்தி ஒன்றை 

தவறவிட்டதாக தோன்றும்


கரும் பளிங்குகளை கூண்டில் அடைத்த 

பதைபதைப்போடு அந்த கருவிழிகள் 


 முழுமையாக என்னை ஊற்று பார்க்கும் அதில்

நுண்ணிய வெட்கத்தை  தேடுவேன் 

கண்கள் மறைத்தாலும் உன் உதடுகள் 

வழியே வெளியேறும் அதன் அழகை பருகுவேன் 

 

என் கவிதைகளில் கொஞ்சம் 

மஸ்க்கார சாயல்  இருந்தால் 

அதற்கு நான் பொறுப்பல்ல!





No comments:

Post a Comment