உனக்காக கொடுப்பதற்காக
பதுக்கி வைத்திருந்த மலர் ஒன்று
குறிப்பேடு ஒன்றில் பதுங்கியே இருந்தது !
மூன்று இதழ்களில் உன் மொத்த ஞாபகமும்!
பிரமிடுகள் இல்லாத அந்த பூவை துரத்திய
மரணத்தை வென்ற ஒரு பூரிப்பு!
மெதுவாக அதன் வாசத்தை மட்டும்
உதிர்த்துக்கொண்டே இருக்கிறது!
அதன் நிழலில் அது மலராய் மலர்ந்து இருக்கிறது!
அந்த சருகின் இடைவெளிகளில்
நீ மீட்டி அருந்த நரம்புகள்!
நீ பேசிய வார்த்தைகளில் ஒரு சொல் மட்டும்
தவறி விழுந்ததைப்போல்!
உன் இதழ்களின் குறுக்கு வெட்டு தோற்றம் போல் அதன் அழகு !
யாரும் அறியா உலகில் நிம்மதியாய் !



No comments:
Post a Comment