உன் வீட்டு விண்டோவில்
உன்னை பார்ப்பதும்
ஷாப்பிங் மால் ல் விண்டோ ஷாப்பிங் செய்வதும் ஒன்றுதான்!
நீ வீட்டில் இல்லாத பொழுதுகளில்
உன் தெருவில் தனியாக வருகிறேன்
தனிமையில் அல்ல !
உன்னை பார்த்தமாத்திரத்தில்
காய்கறிக்கடையில் கால்கிலோ காதல்
வேண்டும் என்று
கேட்டுவிட்டேன்!
உனக்கோ பூக்களின் மீது ஆசை
பூக்காரிக்கோ உன்மீது ஆசை!
தான் விற்பது போலி என்று தெரிந்தும்
தைரியம் தான் அந்த பஞ்சுமிட்டாய்விற்பவனுக்கு
உன்
வீதியில் விற்பதற்கு!
நீ அலட்சியமாய் என்னை பார்ப்பதே
என்
குறைந்தபட்ச இலட்சியங்களில் ஒன்றுதான்!
பார்க்காமல் போனாலும் பரவாயில்லை
நீ பார்த்தவர்களை பார்த்து
நிம்மதிக்கொள்கிறேன்!



No comments:
Post a Comment