இருள் பூசிய மேனியவள் !
கருமேகங்களை குழைத்த தேகமது !
வர்ணகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட நிறத்தவள்
கூந்தலின் வர்ணத்தில் கொஞ்சம் குறைவுதான்!
கூடினால் என்ன ? என்பதுபோல அவள் புருவம்
அடர்ந்த நிறங்களில் அதுதான் அழகு !
ஆழமான பாரம்பரிய கொண்ட நிறம்!
தொடக்க கால தூரிகைகளின் நிறம் !
எந்த நியாயப்படுத்துதலும் தேவையில்லாத நிறம் !
அழகுக்கும் நிறத்துக்கும் ஒப்பிடுவது தேவையயற்றது!
நான் கறுப்பானவள் என்று பெருமையுடன்
அவள் விழிகள் மொழிபெயர்த்தது அவளை !
.jpg)


No comments:
Post a Comment