அவள் அவளது வயதுக்கு ஏற்ற
பிள்ளைகளோடு வளையல்கடைகளில்
பொழுதை கழிக்கவில்லை !
காதலித்து கதைத்து
காலத்தை தொலைக்கவில்லை!
சமூக வலைத்தளங்கள் அவள் மூளையை
மென்றுதின்றுவிடவில்லை !
குழந்தைகளின் பனிக்கூழ்
இனிமையில் அவள் கரைந்துவிடவில்லை!
பழமைவாதத்தை எதிர்த்த
புரட்சி பதுமைகளில் அவளும் ஒருவள்!
அதற்காக அவளுக்கு ஐரோப்பாவின்
உயரிய விருது கிடைத்திருக்கிறது ..
அனால் விருதை வாங்க அவள் வரவில்லை !
அந்த விருதை அவள் இன்னொரு புரட்சி பெண்ணின்
கையில் கிடைக்கும்படி செய்துவிட்டு !
தூரதேசம் சென்றுவிட்டாள் - இல்லை அவள் மரணம் வரை
அவர்கள் அடித்தே கொன்றுவிட்டனர்..
கடவுளின் பெயர்கொண்ட அவளை
அந்த கடவுள் கூட காப்பாற்றவில்லை !
-மாஷா அமினி-
இருப்பத்திரெண்டு வயது ஈரானியன் இளம்பெண் !



Arumai Nanbare ,way to go 💐🙏👏
ReplyDeleteNice
ReplyDeleteVery well expressed👏👏👏👏👏
ReplyDeleteஅவள் அவள் தான் !!!
ReplyDelete