நிறமற்ற மலரில் தேனருந்தியபின்
வண்ணத்துப்பூச்சி என்னவாகும்?
மின்மினிகளால் இரவுகளெல்லாம்
விடிந்துவிட்டால் என்னவாகும்?
வனமாரிக்குளத்தில் தவறிவிழுந்த
மீன்கொத்தி பறவை என்னவாகும்?
வெயில்காலத்து மழைத்துளிகள் உன்
வளைவுகளை நனைத்தபின் என்னவாகும்?
இருவரின் முத்தத்துக்கிடையே
நான்கு உதடுகள் என்னவாகும்?
காதலாகும்! காதலாகி கலவியில் கரைந்து மீள் காதலாகும்!
.jpg)


No comments:
Post a Comment