அந்த பேருந்து நிறுத்தத்தில் திருமணத்திற்கு முந்தய
வயதுடைய ஒரு பெண்
மாநிறத்திற்கு குறைவான நிறமவள்!
மிக குறைவான அழகானவள் என்று தன்னாலே நம்பப்பட்டவளாய் தெரிந்தால்
பேருந்து சாரளத்தின் விளிம்பில் நான் அவளையே உற்று நோக்கிக்கொண்டிருந்தேன்
வேறு யாருமே இல்லாத இடத்தை சோதித்துக்கொண்டாள் மீண்டும்
அவளையே பார்த்தேன்..
இம்முறை இழையோடும்
வெக்கத்தில் நெளிந்தாள்
பேருந்து நகர்ந்தவுடனும்
திரும்பி பார்த்தேன்
மெல்லிய புன்னகையில்
பரவசம் அவளுக்குள்,
அவளின் அழகு மேலான
நான் கொடுத்த தன்னம்பிக்கை
கொஞ்ச நேரமாவது
அவளுக்குள் இருக்கும்
அழகு என்பது வரையறுக்கப்பட்டதில்லை
.jpeg)


No comments:
Post a Comment