இனி பேச எதுவுமில்லை என
மூன்று மணி நேரம் பேசினாய்
எதுக்கு பேசுகிறேன் தெரியவில்லையென
இரண்டு மணி நேரம் பேசுகிறாய்
நீ பேசாமலே போனாலும்
இருபத்திநாலு மணி நேரம்
மௌனத்தில் பேசிக்கொள்ளலாம் கவலையில்லை
கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
No comments:
Post a Comment