உன் பின்வீட்டு தோட்டத்தில்
பூக்களை பறிப்பதற்காய் வருகிறாய் !
உன் விரல் பட்ட அன்று மட்டும்
அவை பூச்செடி என்றழைக்கப்படும்!
நீ பறித்துவிட்டு சென்றாலும் அவை
உன்னை வெறுப்பதில்லை
திரும்ப திரும்ப பறிப்பதற்காக
மீண்டும் பூக்கும்!
உன்னை பிரிவதை தவிர
பெரிய வருத்தம் இருக்கப்போவதில்லை !
வேறெதுவும் வித்தியாசமில்லை
வேரும் கிளைகளும் உனக்குக்கில்லை
இரண்டு செடி தள்ளி உன்னை
எதிர்பார்த்து பூத்து போய் கிடக்கும்
என் கண்களையும் சேர்த்து பறித்து போ !



No comments:
Post a Comment