மொழி திணிப்பு, எதிர்ப்பு என
ஊரெல்லாம் அடித்துக்கொள்ள
நம் மொழி என்னெவென்று
மொழிக்கே விளங்கவில்லை !
இம் மொழிக்கு எழுத்தும் இல்லை
பேச்சும் இல்லை
அனாலும் தாய் மொழியைவிட இனிக்கிறது !
தகவல் சாதனம் ஏதுமின்றி
என்னிடம் பேசுகிறது உன் மொழி
அறிவொப்பொலி துணையின்றி
அது என்னை எழுப்பிவிடுகிறது
உன் வெட்கங்களை வெட்கமின்றி
வெளியிட்டு புன்னகைக்கிறது!
பிள்ளை மொழிகளை போல
பிழையின்றி இருக்கிறது !
தாய்மொழியாய் ஏற்கச்சொல்லி
மவுன மொழியே உண்ணாவிரதம் இருக்கிறது !
இறுதியாக உன் தாய்மொழியை அறிந்துகொண்டேன்
உன் விழியே அது !
.jpeg)


No comments:
Post a Comment