உன் பெயர் முன்னிலும்
அழகாகி கொண்டே போகிறது
நீ இல்லாத தனிமையை நிறைவு செய்கிறது
அலை பேசியில் பதிந்திருக்கும் உன் பெயர்
முகமற்ற அந்த பெயரில்
ஒப்பனைமிகுந்த அழகு தெரிகிறது
அடிக்கடி என் கண் திருஷ்டி பட்டாலும்
அதன் அழகு குறையவில்லை
நீ அழைக்காவிடினும் உன் பெயரின்
அழகு தாழவில்லை
சிறு வெட்கத்தின் சாயல்
ஒரு பெண்மையின் வடிவம்
அந்த பெயரில் படிந்திருக்கிறது
உன் பெயரின் அர்த்தம் கூகிளில்
பின்வருமாறு இருந்தது
"அழகு"



No comments:
Post a Comment