Monday, January 2, 2023

அவ்வளவு வேண்டாமே

 யார் யாரெல்லாம் எதை எதையோ செய்கிறார்கள்

 மேலதிகாரிகளெல்லாம் கீழிறிங்கி அதை செய்கிறார்கள்


 கூச்சமில்லாமல் புரளிகள் பல கூச்சலிட்டு கத்தி பார்க்கிறார்கள் 


கதை சொல்லிகளை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள்


 இல்லாதவர்களை மிரட்டி சாட்சிகள் திரட்டுகிறார்


 இத்தனையும் செய்வதற்கு பாவம் இரவுகள் பல நிம்மதியையை இழந்திருக்க கூடும்


 அவ்வளவு வேண்டாமே 


நான் எளிமையானவன் நண்பர்களே கேட்டால் இருந்தால் எதையும் தருவேன் 


விடுமுறை கிடைத்தால் புல்லில் ஊரும் சிறு பூச்சியையும் புகைப்படம் எடுக்கும் வசதியான மனம் படைத்தவன்


 அவ்வளவு வேண்டாமே


 குரைக்கும் நாயை சிங்கம் அல்டசியமாய் பார்க்குமே அதுதான் உங்கள் மீதும் என் பார்வை 


ஒருவேளை உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்றாலும் என் பார்வை அப்படிதான்


 அவ்வளவு வேண்டாமே 


நீங்கள் திணறுவது தெரிகிறது எதையோ மறைக்க முயல்வது தானாகவே வெளிவரும்


 அவ்வளவு வேண்டாமே

4 comments:

  1. அருமையான கவிதை அர்த்தமுள்ள கவிதை நன்றி

    ReplyDelete
  2. Unnai sutriyum appadithan irukirathu thambi...arpa manitharkal aththaithanea seivaarkal... Keatka seviyullavan keatkattum...ithaiyum kadanthu povom....nammodu kadavul...

    ReplyDelete
    Replies
    1. Yes I have written what is happening to me..The day will come truth will come out

      Delete