ஒவ்வொரு முறையும்
அந்த போக்குவரத்துக்கு சமிக்கைக்கு
என் மீது தான் எத்தனை கோபம்
சிவப்பான கண்களுடன் என்னை முறைக்கிறது
சிலந்தி வலையை போல என்னிலும் அது பரவிவிடுகிறது
வலப்பக்கத்தில்ருந்து மாலைநேர
மெல்லிய ஒளியை போல ஒரு புன்னகை
என்னை நோக்கி ஒரு மழலை
காரணம் எதுமின்றி சிரித்தபடி
அதன் சத்தம்
இறகை உதிர்த்த ஒரு பறவையை போல
ஒரு வனதேவதையின் வாசம் அதன்மேல்
அது சிரிக்க சிரிக்க
இளவெயிலின் ஒளி நிலவின் சாயலை பரவ செய்தது
வெறும்கையை நீட்டி பெற்றுக்கொள் என்றது
அன்பின் வெளிச்சத்தை..
அன்று முழுவதும் என் அலுவலகத்திலும்
அதை பரவ செய்தேன் !



No comments:
Post a Comment