செடியில் பூத்திருக்கும் சூரியன்
சிரித்து மகிழும் சிட்டு குருவி
காட்டு பூக்களின் கட்டழகு
முகில் துகிலுரிக்கும் பூமி
மகளின் துள்ளல்
குளிரூட்டும் மூடுபனி
கூடவே சூடான தேநீர்
நிம்மதியான ஞாயிறுக்கிழமை
எப்போதும் வருவதில்லை..!
கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
No comments:
Post a Comment