சமீபத்தில் நான் ரசித்த ஒரு சினிமா
இதுபோன்று சினிமாக்கள் மிகவும் அபூர்வம் !
காதல், தேசப்பற்று ,துரோகம் மதம் மனிதம் கலந்த ஒரு காக்டைல் கலவை!
அடுத்த அடுத்த திருப்பங்கள் நம் விருப்பத்தை அதிகரிக்கின்றது ,
கதை நாயகியின் வருகை இன்னும் திருப்புமுனையாக இருக்கிறது
Mrunal Thakur கதைக்கு உயிரோட்டம் தருகிறார் !
உதடுகளில் ஒளியிரி விளக்கு (LED light) பொறுத்தப்பட்டதைப்போல ஒரு புன்னகை !
சோகமான இடத்திலும் சிரித்து விடுவாரோ என்ற அச்சம் எனக்கு !
தான் ஏற்ற பாத்திரத்துக்கு ஏற்ற உடை ,நடை, நடனம்
பாலைவனத்தில் கிடைத்த பனிக்கூழ் போல படம் முழுக்க பரவசப்படுத்துகிறார்!
சல்மான் துல்கருக்கு இது வாழ்நாள் திரைப்படம்!
காஸ்மீர் குளிரை காட்சிகளில் உணரமுடியும் !
சிறு சிறு பாத்திரங்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்,
பிரமாண்டம் குறையாத காட்சி கட்டமைப்பு ,நேரத்தை வீணாக்காத நேர்த்தியான திரைக்கதை
ஒப்புவுமையற்ற ஒளிப்பதிவு என எதையும் குறைகூற முடியாது
வாய்ப்பு கிடைத்தால் கண்டு களியுங்கள்



No comments:
Post a Comment