
உறக்கம் எழுதும் கவிதை
இந்த கனவுகள்..
இரவில் விதைத்தால்
விடிவதற்குள்
பூத்துவிடும் செடி
கனவு மட்டும்தான்..
கனவுக்கு
பசியெடுத்தால் நம்
நேரத்தை சாப்பிட்டுவிடும்..
அதிகாலை கனவுகள்
கரைந்துபோய்விடுகின்றன
பனித்துளியின் அடர்த்தியில்..
அவளுக்காய் காத்திருக்கிறபோது
அவள் வரவில்லை.- இந்த
கனவு மட்டும் தவறாமல்
வருகிறது..
ஏய் கனவே
உறங்குவது போல
ஒரு கனவை கொடு
அப்போதாவது
உறங்கிகொள்கிறேன்..
எல்லா கல்லறைகளிலும்
ஏதாவது ஒரு
கனவும் சேர்த்தே
புதைக்கப்படுகிறது..


very good
ReplyDelete