Wednesday, April 29, 2009

கணக்கு பாடம்


எதிர்பாராமல் பார்த்தேன்
எழுத்தில் அடக்க முடியாத அழகு அவள்
எனது கைக்கடிகாரத்தை பார்த்தேன்
கணக்குப்போட்டேன்
மறுநாள்.அதே நேரம்..அதே இடம்..அதே அழகு..
கணக்கு சரியாய் போனது..

அவள் என்னை பார்க்கவில்லை என்றென்னி..
அவளை பார்வையால் உறிஞ்சினேன்..
சட்டென்று என் பக்கம் திரும்பி
அனல் பார்வையால்
பட்டென்று பொசுக்கிப்போட்டாள்..
கணக்கு தவறியது .!

வேறொருநாள்
வேண்டுமென்றே வேறுபக்கமாய்
வெறுப்பாய் பார்த்துக்கொண்டிருந்தேன்..
அவள் விழியால் என்னை அளந்தாள்..
நான் திரும்பியவுடன்
அவளை திருப்பிக்கொண்டாள்..
கணக்கு சரியாய் போனது.!

பல்வரிசை பயத்தால்
ஆயிரம் தந்தியடிக்க
ஒரு ஹாய் சொன்னேன்..
ஹலோ சொன்னாள் கூலாக..
எதோ பேச நினைத்து..
எதேதோ பேசினேன்..

அன்றுமுதல் அனைவருக்கும் அழகாய் தெரிந்தேன்..
அடிக்கடி தலை வாரினேன்..
தனிமையில் சிரித்தேன்..
தாய்மொழி தடுமாறியது..
தெளிவான பைத்தியமய் திரிந்தேன்..

கணக்குப்பாடம் எனக்கு பொது எதிரி ஆனது..
காதல் கணக்கோடு கூட்டணி வைத்தேன்
ஒரு வருடம் ஒடி முடிந்தது..
அடுத்த வருடம் அவளுக்காய் காத்திருந்தேன்..
அவள்வரவில்லை.. வரவேயில்லை..

துக்கமான பகல்கள்
தூக்கமில்ல இரவுகள்.. என் நாட்கள் ஓடின..
தூசிபடிந்த புத்தகத்தை
தேடி எடுத்தேன்..ஆனால்
தூரத்தில்
தொலைந்தேபோனது
என் கணக்குபாடம்.!

3 comments:

  1. படைப்பு நன்றாக உள்ளது. தொலைந்தேபோனது
    கணக்குபாடமா உங்களின் காதலியா?

    ReplyDelete
  2. படைப்பு நன்றாக உள்ளது. தொலைந்தேபோனது
    கணக்குபாடமா உங்களின் காதலியா?

    ReplyDelete